வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 230 சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன

பொலிஸாரும், நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 230 சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன
ADVERTISEMENT
ADVERTISEMENT

கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரும், நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

12.5 கிலோகிராம் எடைக்கொண்ட 177 கொள்கலன்களும், 5 கிலோகிராம் எடைக்கொண்ட 28 கொள்கலன்களும், 2.5 கிலோகிராம் எடைகொண்ட 25 கொள்கலன்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT