மட்டக்களப்பு, வாகரையில் 23 வயது மனைவி கொலை; 26 வயது கணவர் கைது!

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வாகரையில் 23 வயது மனைவி கொலை; 26 வயது கணவர் கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மட்டக்களப்பு மாவட்டம், வாகரை – கதிரவெளி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT