எருமை மாடுகள் திருட்டு: இருவருக்கு 19ஆம் திகதி வரை விளக்கமறியல்

சம்மாந்துறைப் பகுதியில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 12 எருமை மாடுகளில் 7 மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எருமை மாடுகள் திருட்டு: இருவருக்கு 19ஆம் திகதி வரை விளக்கமறியல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய சந்தேகநபர்கள் இருவரையும், எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களுடன், சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை (05) ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களை 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்மாந்துறைப் பகுதியில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 12 எருமை மாடுகளில் 7 மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த நபருக்கு  சொந்தமான குறித்த 12 எருமை மாடுகளும் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் சம்மாந்துறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட எருமை மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருப்பதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், 7 எருமை மாடுகளை மீட்டதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த  42 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், இத்திருட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாகச் செயற்பட்ட சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரும் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாடுகளை மீட்கும் நடவடிக்கைகளுடன், கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமும் சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT