ரூ.12 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு உணவு வழங்கும் விநியோகஸ்தரிடம் 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற உதவி அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.12 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்தே இந்த இலஞ்சத் தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கமைய, சிறைக்காவலர் ஒருவர் ஊடாக 1,235,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட போதே, உதவி அத்தியட்சகர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT