அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் முத்துசாமி சிவராஜன் முதலிடம்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டியும் “ஒன்றாய் ஓடுவோம், ஒன்றாய் எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த அரை மரதன் ஓட்டப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் முத்துசாமி சிவராஜன் முதலிடம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

(றியாஸ் ஆதம், ஏ.எல்.எம். ஷினாஸ், எம்.எம். ஜபீர்)

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் 21.1 கிலோமீற்றர் பிரதான பிரிவில் இலங்கையைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கே.ஜி.ஆர். சமரகுமார இரண்டாம் இடத்தையும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சொஹி மியாமொடோ மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டியும் “ஒன்றாய் ஓடுவோம், ஒன்றாய் எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த அரை மரதன் ஓட்டப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொத்துவில் – அறுகம்பே பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் இடம்பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவரும் இயன்மருத்துவருமான இஸட்.எம். ஹாஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எம்.எம். முசாரப், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உட்பட சுமார் 500 பேர் பங்கேற்றனர். போட்டியின் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT