திருகோணமலையில் ஓட்டோ மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

திருகோணமலை, சீனத் துறைமுக கப்பல்துறை வீதியில் ஓட்டோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் ஓட்டோ மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

திருகோணமலை, சீனத் துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்த ஓட்டோ மீது நேற்றிரவு (02) முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும், துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி காரணத்தைக் கண்டறிவதற்கும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT