முறிந்து விழுந்த மரக்கிளை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்

காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறிந்து விழுந்த மரக்கிளை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

காலி உடுகம பிரதான வீதியில் கொட்டவ பகுதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்றின் கிளை இன்று (14) முறிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனிந்தும பிரதேசத்தில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 56 வயதான தாய், 58 வயதான தந்தை மற்றும் 30, 26 வயதான இரண்டு மகன்களே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கராப்பிட்டிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தந்தையை வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

முச்சக்கர வண்டியை மகன் ஒருவரே ஓட்டிச் சென்றுள்ளதுடன் அவர் பல்கலைக்கழக மாணவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொட்டாவ காட்டில் இருந்த 150 அடி உயரமான பழைய மரம் ஒன்று மற்றுமொரு மரத்தின் மீது சரிந்து விழுந்துள்ளது.

இதனால், மற்றைய மரத்தின் பெரிய கிளை முறிந்து வீதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது விழுந்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT