நாட்டில் இன்றும் மழை, காற்று, மின்னல் தாக்கம்!

வடமேற்கு மாகாணம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்றும் மழை, காற்று, மின்னல் தாக்கம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வடமேற்கு மாகாணம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசும்.

காங்கேசன்;துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். (30-40) மற்றும் அவ்வப்போது கி.மீ. 50 வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் (20-30) வரை நிலவும். மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடற்பகுதிகள் தற்காலிகமாக பலத்த காற்றுடன் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT