டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா பதில்!

2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா பதில்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

இதைத்தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கான பயணத்தை தொடங்கியுள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏனெனில் 2022 டி20 உலக கோப்பையில் விராட் கோலியை தவிர்த்து ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனால் சீனியர்களை கழற்றி விட்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்கும் திட்டத்தை பிசிசிஐ கையிலெடுத்துள்ளது. 

இதன் காரணமாகவே கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடர் உட்பட மேற்கொண்டு ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் எவ்விதமான டி20 போட்டியிலும் விளையாடாமல் இருக்கின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கிடையே ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் இந்திய அணியின் கேப்டனாகவும் பாண்டியா நியமிக்கப்படுவார் என்ற செய்திகள் வலம் வருவதால் சமீப காலங்களாகவே டி20 போட்டிகளில் தடுமாறி வரும் ரோகித் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் இருக்கிறது. அனைவரும் சிறப்பாக விளையாட விரும்புகின்றனர். எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். நீங்கள் என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அதற்கான பதிலை நீங்கள் விரைவில் பெறுவீர்கள்” என்று கூறியுள்ளார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT