2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

 2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன், மந்தனா 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். 

இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா 13 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன், ரிச்சா கோஷ் 23 ரன், வஸ்த்ரகர் 9 ரன், அமன்ஜோத் கவுர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாட தொடங்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில், ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT