இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற தாய்

இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வாகன உதவியை நாடினர். 

இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற தாய்
ADVERTISEMENT
ADVERTISEMENT

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த  ராஜூ என்பவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே இறந்து கிடந்து உள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராஜூவின் தாயும், தம்பியும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜூ உடலை பார்த்து கதறி அழுதனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பின்னர் இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வாகன உதவியை நாடினர். 

ஆனால் பல மணி நேரமாக கேட்டு பார்த்தும் உடலை எடுத்து செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனால் ராஜூ உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் பல மணி நேரம் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதற்கிடையே வாலிபர் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து மீரட் மருத்துவக்கல்லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT