கம்பஹா மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை

பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும். 

கம்பஹா மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை
ADVERTISEMENT
ADVERTISEMENT

News21 Colombo சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதால் எதிர்வரும் 19ஆம் திகதி (19.07.2023) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8:30 முதல் பி.ப. 8:30 வரையிலான 12 மணி நேர நீர் விநியோகத் தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT