எட்டு கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது
டிங்கி படகில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் இருந்த தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Colombo (News21) கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி - வன்னிமுந்தலம் கலப்பு பகுதியில் இன்று புதன்கிழமை (12) காலை கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அங்கு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் டிங்கி படகில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் இருந்த தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -