இன்று பதவிப் பிரமாணம் செய்யவுள்ள புதிய அமைச்சரவை?
புதிய அமைச்சரவை இன்று(18) காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நியமிக்கப்படும் புதிய அமைச்சரவையில் சுமார் 20 பேர் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதுடன், ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த 3ஆம் திகதி இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்திருந்தது.
எனினும், மறுநாள் நிதி, வெளிவிவகார, கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்து பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை வழமைபோல் முன்னெடுத்தார்.
