இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 9.5 லட்சத்தைத் தாண்டியது

2026 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் மே 17 வரை 951,742 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிகமானோர் வந்திருந்தாலும், ஏப்ரல், மே மாதங்களில் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 9.5 லட்சத்தைத் தாண்டியது
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 17 வரையிலான காலப்பகுதியில் 951,742 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இது 950,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. அவர்களுள் அதிகமானோர் இந்தியர்கள் - 221,953 பேர். பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மே மாதம் முதலாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மட்டும் 75,465 பேர் வந்துள்ளனர். எனினும், ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT