நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு: கொத்மலை கோளாறு குறித்து விசாரணை, சூரிய மின் படலங்களை துண்டிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்

நாடு முழுவதும் இன்று காலை திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், கொத்மலை மின் உற்பத்தி நிலைய கோளாறு குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், சூரிய மின் படலங்களை துண்டிக்குமாறும் அமைச்சர் அனுர கருணாதிலக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு: கொத்மலை கோளாறு குறித்து விசாரணை, சூரிய மின் படலங்களை துண்டிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) காலை முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின் விநியோகத்தை மிக விரைவில் படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இந்த மின் தடைக்கான பிரதான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், நேற்று (16) கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் செயற்பாடுகள் தடைப்பட்டமை இந்த மின் சமநிலையின்மைக்குக் காரணமாக அமைந்ததா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தேசிய மின்சாரக் கட்டமைப்பை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், கூரைகளில் சூரிய மின் படலங்களைப் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரும் உடனடியாக அவற்றைத் துண்டிக்குமாறு அமைச்சர் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின் விநியோகம் படிப்படியாக மீட்டெடுக்கப்படும் நிலையில், வலையமைப்பைப் பாதுகாக்கவும், மேலும் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்தக் கோரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது. கொத்மலை மின் உற்பத்தி நிலையச் சிக்கல் தொடர்பான விசாரணை முடிவுகள் வெளியாகும்போது, இந்த மின் தடைக்கான உண்மையான காரணம் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT