இலங்கை – இந்திய கூட்டு இராணுவப் பயிற்சி ‘மித்ர சக்தி – XII’ வெற்றிகரமாக நிறைவு

இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு இடையிலான 12ஆவது வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி – XII’, இரண்டு வார கால தீவிரப் பயிற்சிகளைத் தொடர்ந்து மதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இலங்கை – இந்திய கூட்டு இராணுவப் பயிற்சி ‘மித்ர சக்தி – XII’ வெற்றிகரமாக நிறைவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு இடையிலான வருடாந்த இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியின் 12ஆவது அத்தியாயமான ‘மித்ர சக்தி – XII’ (Mitra Shakti – XII), கடந்த 26ஆம் திகதி மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கடந்த நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமான இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சி, இரண்டு வார கால தீவிரப் பயிற்சி நடவடிக்கைகளுடன் நவம்பர் 26ஆம் திகதி வரை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த பயிற்சியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 17 அதிகாரிகளும் 153 ஏனைய நிலை இராணுவத்தினரும் பங்கேற்றிருந்தனர். இந்திய இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 19 அதிகாரிகளும் 150 ஏனைய நிலை இராணுவத்தினரும் கலந்துகொண்டனர்.

இதற்கு மேலதிகமாக, பயிற்சி முகாமைத்துவம் மற்றும் ஆதரவுப் பணிகளில் ஈடுபட்ட 650க்கும் அதிகமானோர் இந்தக் கூட்டுப் பயிற்சியின் வெற்றிகரமான முன்னெடுப்புக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பயிற்சிக் காலம் முழுவதும் இலங்கை விமானப்படையும் தனது ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

பற்றாலியன் மட்டத்திலான கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள், வான்வழி ஆதரவை ஒருங்கிணைத்தல், நகர்ப்புற மற்றும் வனப்பகுதி போர் நடவடிக்கைகள், நேரடி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள், இராணுவ வாகனத் தொடரணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

மேலும், விசேட படையினரின் பயிற்சி வசதிகளைப் பார்வையிடுவதற்கும் நவீன போர் பயிற்சி உபகரணங்களைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

பல்வேறு இராணுவ நடவடிக்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட நடைமுறைப் பயிற்சிகளிலும் இரு நாட்டுப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.

கூட்டுப் பயிற்சியின் இறுதி நடைமுறைக் கட்டமான ‘அரணமைக்கப்பட்ட கிராமத்தின் மீதான தாக்குதல்’ (Assault on Fortified Village) என்ற தொனிப்பொருளிலான மாதிரி இராணுவ நடவடிக்கை நவம்பர் 25ஆம் திகதி மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.

இதன்போது இரு நாட்டு இராணுவத்தினரின் தந்திரோபாயத் திறன்கள், போருக்கான தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆற்றல் என்பன வெளிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், உதவிப் பாதுகாப்பு ஆலோசகர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் விசேட அழைப்பாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT