2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 11 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா!

இரண்டாம் நாளில் பாதியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக  ஐடன் மார்க்ராம், டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர்.

 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 11 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ஐடன் மார்க்ராம் 5 ரன் எடுத்து முகமது சிராஜ் ஓவரில் கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டோனி டி ஜோர்ஜி  சற்று நிதானமாக விளையாடி 28 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய  கீகன் பீட்டர்சன் வந்த வேகத்தில் 2 ரன்கள் எடுத்து பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.  பின்னர் தொடங்க வீரர் டீன் எல்கர் , டேவிட் பெடிங்காம் இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிறப்பாக விளையாடி வந்த தொடங்க வீரர் டீன் எல்கர் சதம் விளாசினார். இருப்பினும் மறுபுறம் விளையாடிய டேவிட் பெடிங்காம் 80 பந்தில் அரைசதம் கடந்து 56 ரன்னில் முகமது சிராஜ் ஓவரில் போல்ட் ஆனார்.

பின்னர் களம் கண்ட கைல் வெரைன் சொற்ப ரன்கள் எடுத்து வெளியேற 2-ம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டை இழந்து 256 ரன்கள் எடுத்து 11 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

களத்தில் டீன் எல்கர் 140* , மார்கோ ஜான்சன் 3* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டையும் , பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் பறித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT