நிலவும் வெப்பம் காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்

நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை காணப்படுகின்றது. இதனால், தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நிலவும் வெப்பம் காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை காணப்படுகின்றது. இதனால், தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படுவதுடன், குருநாகல், இரத்தினபுரி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15) கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சூரிய ஒளி நேரடியாக தோலின் மீது படுவதால் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும், இதன்போது தோலில் எரிகாயங்கள் ஏற்படலாம்.

அத்துடன், தோலில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது, தோல் அரிப்பு, வியர்வையால் சீழ் கொப்புளங்கள், வியர்வை தேங்கி உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை இந்த தொற்று நிலைகளாக அடையாளம் காணப்படுகின்றன.

மேலும், தற்போது காணப்படும் தோல் ஒவ்வாமை வெப்பமான வானிலை காரணமாக அதிகரிக்கக்கூடும் என  நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறிப்பாக சிறு பிள்ளைகள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம் என்றும் தோல் நோய் நிபுணர் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT