பாடசாலை மாணவர்களுக்கு இடையில் குழு மோதல்; ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி

பேருவளையில் ஏற்பட்ட  மோதலில்  பாடசாலை மாணவர்கள் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் குழு மோதல்; ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

பேருவளை பகுதியில் உள்ள இரண்டு பாடசாலைகளை  சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட  மோதலில் ஏழு மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருவளை கல்வி வலயத்திற்குள் உள்ள இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே நேற்று (05) ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அங்குள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட தனது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த பாடசாலையை சேர்ந்த ஒரு ஆசிரியர் புகார் அளித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் பல நபர்களும் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோதலின் போது தலையில் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகு காயமடைந்த மாணவர்களில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் குறித்து அளுத்கம பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT