பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில், இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யக்கலமுல்ல – இமதுவ வீதியின் வாடியவத்த பகுதியில், அஹங்கம நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம், நேற்று திங்கட்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில், இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர