இனி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்! – செப்டம்பர் முதல் புதிய நடைமுறை

டிஜிட்டல் பொருளாதார இலக்கு 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலராக விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். 

இனி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்! – செப்டம்பர் முதல் புதிய நடைமுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து போக்குவரத்து அபராதங்களையும் இணையவழியில் செலுத்துவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் மாதம் முதல் இலங்கையில் அனைத்து போக்குவரத்து அபராதங்களையும் பிரத்தியேகமாக இணையவழி ஊடாக செலுத்துவதற்கு வசதி செய்யப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, இந்தத் தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த இணையவழி அபராதக் கொடுப்பனவு வசதியானது 'GovPay' என்ற செயற்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றங்களை மிகவும் இலகுவாகவும் வசதியாகவும் மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தக் கூட்டத்தில் போக்குவரத்து அபராதங்கள் தவிர, மேலும் சில முக்கிய டிஜிட்டல் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

- இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குதல்.

- தேசிய சூப்பர் ஆப் (National Super App) மற்றும் தேசிய கியூஆர் (National QR Drive) இயக்கம்.

- தேசிய தரவுப் பரிமாற்றம் (National Data Exchange) 

- தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வலையமைப்பை மாற்றும் வசதி (Number Portability).

டிஜிட்டல் பொருளாதார இலக்கு 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலராக விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். 

அந்தப் பரந்த திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த இணையவழி அபராதக் கொடுப்பனவு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT