அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவின் தண்டனையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தத் தகவலை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம், அனோஜன் சிவராசாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை நேற்று செவ்வாய்க்கிழமை (13) ரத்து செய்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக இது அமைந்துள்ளதோடு, சிவராசாவுக்குப் பெரும் நிவாரணமாகவும் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர், இதற்காகக் களமிறங்கிப் பணியாற்றிய சவூதிக்கான இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் இருநாட்டு சட்டக் குழுக்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

அனோஜன் சிவராசாவின் வழக்கில் இத்தீர்ப்பு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டாலும், அவரது தற்போதைய சட்ட நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT