பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிகினிக்குப் பதிலாக முழுக்கை ஆடையில் தோன்றி கவனம் ஈர்த்த பங்களாதேஷ் அழகி

புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெறும் 2026 பிரபஞ்ச அழகிப் போட்டியின் நீச்சலுடைச் சுற்றில் பிகினிக்குப் பதிலாக நீல நிற முழுக்கை ஆடையில் தோன்றி பங்களாதேஷ் அழகி சமீரா கான் மாஹி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிகினிக்குப் பதிலாக முழுக்கை ஆடையில் தோன்றி கவனம் ஈர்த்த பங்களாதேஷ் அழகி
ADVERTISEMENT
ADVERTISEMENT

சர்வதேச பிரபஞ்ச அழகிப் போட்டியின் (Miss Universe) நீச்சலுடைச் சுற்றில், வழக்கமான பிகினி ஆடைக்குப் பதிலாக நீல நிற முழுக்கை ஆடையைத் தெரிவு செய்து பங்களாதேஷ் பிரதிநிதி சமீரா கான் மாஹி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

போட்டியில் பங்கேற்ற பெரும்பாலான அழகிகள் பிகினி அல்லது இரண்டு துண்டு நீச்சலுடைகளில் தோன்றிய நிலையில், மாஹி உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான நீல நிற ஆடையை அணிந்து மேடையில் தனித்துவமாகக் காட்சியளித்தார். நீண்ட கைகளையும், அவர் நடக்கும்போது பின்னால் அசைந்தாடும் நீல நிறத் துணியையும் கொண்ட அந்த ஆடை அவருக்குத் தனித்துவமான தோற்றத்தை அளித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நீச்சலுடைச் சுற்று தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) இரவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த மாஹி, சர்வதேச மேடையில் பங்களாதேஷைப் பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்துப் பெருமிதம் வெளியிட்டுள்ளார். நம்பிக்கை, வலிமை மற்றும் நளினத்துடன் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஆடைத் தெரிவு மற்றும் மேடை நடைக்குச் சமூக வலைதளப் பயனர்களிடையே பலத்த பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிகினி அணியாமலேயே ஒரு போட்டியாளரால் சர்வதேச மேடையில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதை மாஹி நிரூபித்துள்ளதாகப் பயனர் ஒருவர் பாராட்டியுள்ளார். மற்றொருவர், பங்களாதேஷின் மிகச்சிறந்த நீச்சலுடைச் சுற்று நடை இதுவென வர்ணித்துள்ளார்.

முன்னதாக, புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெறும் 75ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டியின் தேசிய பாரம்பரிய உடைச் சுற்றிலும் பங்களாதேஷின் கலாசாரப் பாரம்பரியத்தை மாஹி வெளிப்படுத்தியிருந்தார். பாரம்பரிய சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கதர் சேலை அணிந்து, தாய்மை மற்றும் தாய்-சேய் பிணைப்பைப் பிரதிபலிக்கும் கருப்பொருளில் அவர் தோன்றியிருந்தார். 2026ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை நவம்பர் 24ஆம் திகதி புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT