விசா இல்லா பயணச் சலுகையை அதிரடியாக ரத்து செய்தது மலேசியா

இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30 நாட்கள் விசா இல்லா பயணச் சலுகையை ரத்து செய்ய மலேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், 2027 ஜனவரி முதலாம் திகதி முதல் விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விசா இல்லா பயணச் சலுகையை அதிரடியாக ரத்து செய்தது மலேசியா
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லாத பயணச் சலுகையை ரத்து செய்ய மலேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மலேசியாவிற்குப் பயணிக்கும் இந்தியர்கள் கட்டாயமாக விசா பெற்றிருக்க வேண்டும் என அந்நாட்டுக் குடிவரவுத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து அதிகளவான சர்வதேசப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த விசா இல்லாத பயண வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டைக் கொண்ட இந்தியப் பிரஜைகள் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் சமூகப் பயணங்களுக்காக விசா இன்றி 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எவ்வாறாயினும், மலேசியாவில் வேலைவாய்ப்புத் தேடும் சில இந்தியர்கள் இந்த விசா இல்லாத பயண வசதியைத் தவறாகப் பயன்படுத்துவதாக எழுந்த கவலைகளை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளுக்கு அமைய, மலேசியாவிற்குப் பயணம் செய்யும் இந்தியர்கள் அனைவரும் அந்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாகவே செல்லுபடியாகும் விசாவைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இந்த மாற்றத்திற்குத் தயாராவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கும் வகையில், எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் மலேசியாவின் 'MyVISA' இணையத்தளம் ஊடாக விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைக்கு அமைய, 7 வேலை நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருக்கும் விசா விண்ணப்பங்கள் தானாகவே காலாவதியாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உட்பட அனைத்து விண்ணப்பங்களுக்கும் இவ்விதிமுறை பொருந்தும் என்பதுடன், காலாவதியான விண்ணப்பதாரர்கள் புதுப்பிக்கப்பட்ட படிவத்தைப் பயன்படுத்தி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ, பயணத் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது அரசாங்கம் தனது விசா கொள்கையைத் திருத்தியமைத்தாலோ செலுத்தப்பட்ட விசா கட்டணம் மீள வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மலேசியாவில் தங்கியிருக்கும் முழுக் காலப்பகுதியையும் உள்ளடக்கிய பயண மருத்துவக் காப்பீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மலேசிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT