அமைச்சரவையில் மாற்றம்; வெளியான தகவல்

இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் மாற்றம்; வெளியான தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினரிடையே இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், இதற்கான நேரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி வெளிநாடு செல்ல தயாராகி வருவதே இதற்கான காரணம்.

அரசியலமைப்பின் பிரகாரம் மேலும் 08 அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

எனினும் அமைச்சரவை மாற்றத்தில் நான்கு புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது அமைச்சுப் பதவிகளில் உள்ளவர்களின் விடயங்களை நீக்கி புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இராஜாங்க அமைச்சர்களுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் அதில் இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT