அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் மறுபரிசீலனை 

நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள்.

அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் மறுபரிசீலனை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வறுமை நிலையில் உள்ள அனைவரை உள்ளடக்கும் வகையிலும்  அனைவருக்கும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சேகரிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படுவதுடன், மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறையீடுகள் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT