மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

சந்தேகத்திற்கிடமான வகையில் குறித்த லொறி முன்னால் சென்றதாகவும், அப்போது பொலிஸார் லொறியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்று நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சந்தேகத்திற்கிடமான வகையில் குறித்த லொறி முன்னால் சென்றதாகவும், அப்போது பொலிஸார் லொறியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, லொறியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த லொறியில் மாடுகளை ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT