கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியின் வசமானது

கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.
கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியின் வசமானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார், இன்று (16) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் நடைபெற்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசாரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீஸா சரூக் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரீஸா சரூக் 54 வாக்குகளை பெற்றார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -