பால்மா இறக்குமதி வரியில் மாற்றம் - மீண்டும் பால்மா விலை அதிகரிக்கப்படுமா?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பால்மா இறக்குமதி வரியில் மாற்றம் - மீண்டும் பால்மா விலை அதிகரிக்கப்படுமா?
ADVERTISEMENT
ADVERTISEMENT

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோகிராம் பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபாய் சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு பின்னர், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபாய் வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT