நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும்: நிறுவனம் அறிவிப்பு

3,900 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும்: நிறுவனம் அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 3,900 மெட்ரிக் தொன் திரவ பெட்ரோலிய எரிவாயுவை ஏற்றிவந்த ‘பிரான்கோயிஸ்’ (FRANCOIS) என்ற கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், அதிலுள்ள எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டிற்குத் தேவையான எரிவாயுக் கையிருப்பு தொடர்ச்சியாகக் கிடைத்து வருவதால், சந்தைக்கு தடையின்றி எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக விநியோக நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 350,000 வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT