அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வெளியான தகவல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத்துக்காக இதுவரை நலன்புரி நன்மைகள் சபை சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு வீடாகச் சென்று இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.4 மில்லியன் விண்ணப்பங்களில் சுமார் 1.8 மில்லியன் பேர் அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற தெரிவாகினர்.
எனினும், தற்போது 1.72 மில்லியன் பயனாளிகளுக்கே இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -