புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் குறித்து வெளியான தகவல்!

அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் குறித்து வெளியான தகவல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடர்ந்து மூன்றாவது முறையாக மேலும் 3 வார சேவை நீட்டிப்பு கடந்த அக்டோபர் 13 அன்று வழங்கப்பட்டதுடன், விக்கிரமரத்னவுக்கு நான்காவது சேவை நீடிப்பு நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (24ஆம் திகதி) வரை அமுலுக்கு வந்தது.

அதன்படி நான்காவது பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் பொலிஸ் மா அதிபருக்கான பதவி வெற்றிடமாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாறானதொரு பின்னணியில் தான் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  "பொலிஸ் மா அதிபரின் பணி நீட்டிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. புதிய நியமனம் அல்லது பணி நீட்டிப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை." என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT