இறுதிப்போட்டியில் வென்று வெள்ளையடிப்பை தவிர்த்தது இந்திய மகளிர் அணி!
இந்திய அணி தரப்பில் சைகா இஷாக், ஷ்ரெயங்கா பாட்டில் தலா 3 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங், அமஞ்ஜோத் கவுர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷஃபாலி வர்மா 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் மந்தனாவுடன் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பின் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரோட்ரிக்ஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இருப்பினும் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்திய அணி ஏற்கெனவே தொடரை இழந்தாலும், இந்த வெற்றியின் மூலம் ஒயிட்வாஷ் ஆவதை தவிர்த்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.