இந்தியாவின் பிளேயிங் லெவன் இது தான் - முக்கிய வீரர்களை நிராகரித்த முன்னாள் வீரர்...!

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 

இந்தியாவின் பிளேயிங் லெவன் இது தான் - முக்கிய வீரர்களை நிராகரித்த முன்னாள் வீரர்...!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 

இந்த தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகாத திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். 

மேலும் காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்ரேய்ஸ் அய்யர், கே.எல்.ராகுலும், சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராகவும் இடம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்தும், பிளேயிங் லெவன் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சபா கரீமும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தான் தேர்வு செய்த பிளேயிங் லெவன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் ரோகித் மற்றும் கில் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாகவும், 3ம் இடத்தில் கோலியையும் தேர்வு செய்வேன். 4வது இடத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஸ்ரேய்ஸ் அய்யரும், 5வது இடத்தில் விக்கெட் கீப்பர்களாக கே.எல்.ராகுல் அல்லது இஷான் கிஷான்.

ஆசிய கோப்பை தொடருக்காக சபா கரீம் தேர்வு செய்த அணியில் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் மிடில் ஆர்டரில் களம் இறக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடது கை ஆட்டக்காரர் திலக் வர்மா ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சபா கரீம் தேர்வு செய்துள்ள அணி விவரம்:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் / இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT