கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்துக்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்துக்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக, பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்துக்கு அதிகரிக்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

2022ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது.

இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன் பாடசாலை நேரத்தை ஒரு மணித்திலாயம் வரை நீட்டிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT