உலகக்கோப்பை பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? ஐசிசி அறிவிப்பு.. மிரண்டுபோன ரசிகர்கள்

இந்திய அணி விளையாட உள்ள 9 லீக் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்திய அணி அக்.8ஆம் தேதி தங்களின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

உலகக்கோப்பை பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? ஐசிசி அறிவிப்பு.. மிரண்டுபோன ரசிகர்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவில் 4வது முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

மொத்தமாக 10 அணிகள், 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள், இறுதிப் போட்டி என்று உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதற்காக 10 மைதானங்கள் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்திய அணி விளையாட உள்ள 9 லீக் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்திய அணி அக்.8ஆம் தேதி தங்களின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதன்பின் அக்.14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கின. அதேபோல் இந்திய அணி அணியவுள்ள ஜெர்சியும் அறிமுகம் செய்யப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேபோல் உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான அணிகளையும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் உலகக்க்கோப்பை தொடரில் வெற்றிபெறும் அணிகளுக்கான பரிசுத்தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33.18 கோடி பரிசாக அளிக்கப்படவுள்ளது. 

அதேபோல் இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.17.5 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.6.64 கோடியும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குரூப் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கும் தலா ரூ.83 லட்சம் வழங்கப்படும் என்று ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு லீக் போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு ரூ.3.18 லட்சம் வழங்கப்படும் என்று ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி அறிவித்துள்ள பரிசுத்தொகை விவரம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT