நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.

இன்று (08) நண்பகல் 12:12 மணிக்கு மாரவில, பொடுஹெர, குருகத்தே, கல்முனை, கெர்தலாவெல மற்றும் வாரப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT