அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான  தகவல்

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைந்தது 20000 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான  தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைந்தது 20000 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எனினும், 1000 ரூபாய் சம்பளம் மாத்திரமே அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளதாக சம்மேளனத்தினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடுமையாக வாழ்க்கை செலவு உயர்ந்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்காமல் இருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

“அரசாங்கத்தினாலும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்களாலும் செப்டெம்பர் மாதத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் 1000 ரூபாவால் சம்பளம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு வருட காலமாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கபடவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலை தொடர்ந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT