கடுவெலவில் மின்சாதனக் கடையில் தீ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

குறித்த வணிக இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், அக்குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, 2 வயது மற்றும் 6 வயது இரு பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடுவெலவில் மின்சாதனக் கடையில் தீ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் இன்று வியாழக்கிழமை (19) காலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

குறித்த வணிக இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், அக்குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, 2 வயது மற்றும் 6 வயது இரு பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் மின்சாதன உபகரண விற்பனை நிலையம் அமைந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் மேல் தளத்தில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டை தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT