வாகனப் பதிவு உள்ளிட்ட கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

வாகனப் பதிவு கட்டணங்கள்

வாகனப் பதிவு உள்ளிட்ட கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வாகனப் பதிவு கட்டணங்கள்

வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்கள் இன்று (18) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 2,000 ரூபாயாகவும், முன்னுரிமை அடிப்படையிலான வாகன பதிவு கட்டணம் 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

ஒருநாள் சேவையின்கீழ், வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4 000 ரூபாயாகவும், தாமதமாகி செலுத்தப்படும் வாகன பதிவு கட்டணம் பல்வேறு கட்டங்களின் கீழும் அதிகரிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவ்வாறு தாமதக் கட்டணமாக காருக்கு நாளொன்றுக்கு 100 ரூபாயும், உந்துருளிக்கு 50 ரூபாயும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதிவுசெய்யப்பட்ட வாகனத்திற்கான உறுதிப்படுத்தல் சான்றிதழ்களை திருத்தம் செய்வதற்காக மூவாயிரம் ரூபாய் அறவிடப்படவுள்ளது.

இதுதவிர, 1600 CC இயந்திர கொள்ளளவிற்கு குறைந்த மற்றும் 80 கிலோவோட்டிற்கும் அதிக திறன்கொண்ட காரின் முதல் பதிவிற்காக 25 000 ரூபாய் செலுத்தப்பட வேண்டும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT