குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்; விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம்!

தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்; விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று புதன்கிழமை (03) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. 

இந்தத் தாக்குதல் காரணமாக விமான நிலையத்தின் 'டி1' முனையக் கட்டடத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையை மேற்கோள் காட்டி, அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

முன்னதாக, குவைத் நோக்கி ஈரானால் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இலக்கை அடையத் தவறின அல்லது நடுவழியில் உடைந்தன என்றும், பஹ்ரைனை இலக்கு வைத்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன என்றும் அமெரிக்க இராணுவம் தெரிவித்திருந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரான் பிராந்திய அண்டை நாடுகள் மீது பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய போதிலும், அவை அனைத்தும் இலக்குகளைத் தாக்கத் தவறிவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. 

ஈரானின் இந்தத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் கெஷ்ம் தீவில் தாக்குதல்களை நடத்தியதுடன், ஈரானின் பல பலிஸ்டிக் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் முறியடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT