ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரியும் துண்டு பிரசுரம் விநியோகம்

யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் சந்தைகளில் முதற்கட்டமாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரியும் துண்டு பிரசுரம் விநியோகம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கு - கிழக்கு முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழில் இன்று(18) துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் சந்தைகளில் முதற்கட்டமாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் இதில் பங்கெடுத்திருந்தனர்.

தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தமிழ்க் கட்சிகளினால் இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ஹர்த்தாலை எதிர்த்து யாழில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, ஹர்த்தாலை எதிர்த்து யாழில் துண்டுப் பிரசுரம் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT