சமையல் எரிவாயு விலை தொடர்பில் எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் அடுத்த வாரத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை தொடர்பில் எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் அடுத்த வாரத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பான தீர்மானம் இதன்போது எடுக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், “நாட்டிற்கான உள்நாட்டு எரிவாயு விநியோகம் நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது பெரும்பாலான பொருட்களின் விலைகளை குறிப்பிட்ட நிலையான மட்டத்தில் பராமரிக்க முடிந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எவ்வாறாயினும், நாட்டிலுள்ள இரண்டு எரிவாயு இறக்குமதி நிறுவனங்களும் தமது விலை திருத்தத்தின் மூலம் நுகர்வோருக்கு பாரிய அநீதி இழைத்துள்ளன.

இரு நிறுவனங்களினதும் உள்நாட்டு எரிவாயுக்கான ஒரே விலைகள் குறித்து எதிர்வரும் வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT