விசா இல்லாமல் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் கைது 

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசா இல்லாமல் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் கைது 
ADVERTISEMENT
ADVERTISEMENT

வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 06 வெளிநாட்டவர்களையும், வரியில்லா சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT