தபால் மூலம் வாக்களிக்க மற்றொரு வாய்ப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை இன்றும் (11) நாளையும் (12) பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க மற்றொரு வாய்ப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை இன்றும் (11) நாளையும் (12) பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஒதுக்கப்பட்ட கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலும் வாக்களிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT