அடுத்த சில நாட்களில் மழை நிலமையில் அதிகரிப்பு  - வெளியான அறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (09) முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.

அடுத்த சில நாட்களில் மழை நிலமையில் அதிகரிப்பு  - வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (09) முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மி.மீ. 75 டிகிரிக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் =தெரிவித்துள்ளது.

மேலும், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-50 கி.மீ அளவில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT