இலங்கையர்கள் கனடா செல்ல தடையா? கனடா அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இந்த கொலைச்சம்பவமானது கனடாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் மற்றும் கனடா செல்ல முயலும் இலங்கையர்களுக்கும் பெரும் அச்சத்தை அளிப்பதாக இருந்தது.

இலங்கையர்கள் கனடா செல்ல தடையா?  கனடா அரசாங்கம் வெளியிட்ட தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடாவில் தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் இலங்கையை சேர்ந்த ஒரு தாய், அவரது நான்கு சிறு குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு அறிமுகமானவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த கொலைச்சம்பவமானது கனடாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் மற்றும் கனடா செல்ல முயலும் இலங்கையர்களுக்கும் பெரும் அச்சத்தை அளிப்பதாக இருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலகத்திடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

அதற்கு பதிலளித்த அதன் தகவல் தொடர்பு பிரதானி, கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களை வழமைபோல் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT