A/L பரீட்சை வினாத்தாள் கசிவு: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

பரீட்சை  வினாத்தாள், அதற்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் கசிந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

A/L பரீட்சை வினாத்தாள் கசிவு: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினா தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

புதன்கிழமை (10) நடத்தப்பட்ட பரீட்சை  வினாத்தாள், அதற்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் கசிந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால், குறித்த வினாத்தாளை இரத்து செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட பாடத்திற்கான இரண்டாம் வினாத்தாளுக்கான புதிய பரீட்சை வினாத்தாள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் புதிய விவசாய விஞ்ஞான இரண்டாம் தாளுக்கான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT