11 வயது சிறுவன் ஓட்டிய கெப் ரக வாகனம் பௌத்தத் துறவிகள் ஊர்வலத்தில் புகுந்து விபத்து; 8 துறவிகள் உயிரிழப்பு!

ஆரம்ப விசாரணைகளின்படி, சம்பவத்தில் தொடர்புடைய 11 வயது சிறுவன் தனது பெற்றோரின் கெப் ரக வாகனத்தை அவர்களது அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

11 வயது சிறுவன் ஓட்டிய கெப் ரக வாகனம் பௌத்தத் துறவிகள் ஊர்வலத்தில் புகுந்து விபத்து; 8 துறவிகள் உயிரிழப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தாய்லாந்தில் பௌத்தத் துறவிகள் பங்கேற்றிருந்த ஊர்வலத்தில் கெப் ரக வாகனம் ஒன்று புகுந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டியது 11 வயதுடைய சிறுவன் என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் முக்டாஹான் மாநிலத்தில் பௌத்தத் துறவிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டிருந்த ஊர்வலம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த ஊர்வலத்தில் 35 பௌத்தத் துறவிகளும், ஐந்து பக்தர்களும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த சிறுவன் ஓட்டிய கெப் ரக வாகனம் ஊர்வலத்தின் மீது மோதியதில், ஐந்து துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப விசாரணைகளின்படி, சம்பவத்தில் தொடர்புடைய 11 வயது சிறுவன் தனது பெற்றோரின் கெப் ரக வாகனத்தை அவர்களது அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. வாகனத்தை இயக்கும் போது கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனிடையே, விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம் மேலதிக தடயவியல் ஆய்வுகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT